விஜய்யை ஒருமையில் பேசிய திமுக.! 6 மாதங்களில் ஆட்சி மாற்றம்.!

Advertisements

விஜய்யின் தவெக ஆட்சி 6 மாதத்தில் கவிழ்ந்துவிடும் எனவும், தவெக எம்.எல்.ஏக்கள் கூப்பிடாமலேயே திமுக பக்கம் வந்துவிடுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். தவெக எம்.எல்.ஏக்கள் எப்போது ஓடலாம் என்று காத்துக்கொண்டு இருக்காங்க.. அதை தடுப்பதற்காகத் தான் எங்களை காட்டி அவுங்களை பயமுறுத்துகிறார்கள் எனவும் பேசியுள்ளார். மேலும், விஜயை ஒருமையில் மரியாதை குறைவாக விமர்சித்தற்காக, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஏற்கனவே காவல்துறை வழக்குப்பதிவு செய்தது, இந்நிலையில் விஜயை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு அவரை மீண்டும் ஒருமையில் விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன். இது குறித்த பின்னை தகவல்களை தற்பொழுது விரிவாக பார்க்கலாம்.!

திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.. ஆட்சி 6 மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூறி வரும் நிலையில், நேற்று ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அனிதா பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் சூடு பறக்க வைத்துள்ளது.

அந்த கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது,  “கொளத்தூரில் இவர் 5 நிமிடம் பேசினாராம். கொத்து புரோட்டோ போட்டுவிட்டார்களாம். எவ்வளவு திமிறு பாருங்க. இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் கூட நீ வெற்றி பெற முடியாது. உனக்கு ஓட்டு போட்டவங்க எல்லாம் தவறு செய்துவிட்டோம் என்று புலம்புகிறார்கள். தேர்தலில் மாதா கோயிலில் முட்டி போட்டு நடந்தனர்.

தேர்தல் முடிந்தவுடன் திருச்செந்தூரில் வேல் எடுத்து வந்து நின்றார். எம்ஜிஆர் மைசூர் மூகாம்பிகை கோயில் சென்று வாள் கொடுத்தார்..இவரும் அவரை போல அந்த கோயில் சென்று வாள் கொடுத்தார். எம்ஜிஆருக்கும் உனக்கும் ஏணி வைத்தால் எட்டுமா. அவர் வரலாறு என்ன. அவர் எத்தனை ஏழைகளுக்கு உதவினார். திமுகவில் தலைவர்களாக இருப்பவர்கள் கூட அவரிடம் உதவி பெற்றவர்கள் தான். கடுமையான நெருக்கடியில் எங்கள் தங்கம் என்கிற படத்தில் நடித்தார்.

நீங்கள் எந்த மக்களுக்காக, எந்த தொழிலாளி்க்கு ஏதாவது செய்துள்ளீர்களா. பெண்களுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா. உடனே யாரும் தவறாக நினைக்க வேண்டாம். நான் த்ரிஷாவை சொல்கிறேன் என்று யாராவது தப்பாக நினைக்காதீர்கள். எந்த பெண்களுக்காவது உதவி செய்திருக்கிறாரா. எங்கள் தலைவர் ஸ்டாலின் ஏழை எளிய மக்களுக்கு என்னென்னவெல்லாம் செய்திருக்கிறார்கள். நீ சினிமாவில் ஆட்டம் போட்டாய். எழுதி கொடுத்தால் பேசுவார். அவ்வளவு தான்.

பேசிவிட்டு சைகை செய்வார். எதிர்க்கட்சி தலைவர் இருக்கும்போது, முதலமைச்சர் தலையை கீழே குனிந்து தான் இருப்பார். குதிரை பேரம் என்கிறார்கள். அதிமுகவில் உள்ள 23 எம்எல்ஏக்களிடம் சால்வை போட்டு, அவர்களை ராஜினாமா செய்ய வைத்து தவெக பணம் கொடுத்து இணைய வைப்பது யார். குதிரை பேரம் செய்வது யார். திமுகவா, தவெகவா” என்றார்…

மேலும்,  ஆட்சி என்பது உங்களுக்கு நிரந்தரமா? 6 மாதத்தில் நீங்கள் இருக்க மாட்டீர்கள்.. கஞ்சா விற்கிறவனும் லாட்டரி சீட்டு விற்கிறவனும் எம்.எல்.ஏ ஆகிவிட்டு , என்னைக்கு இந்த கட்சியில் இருந்து ஓடலாம் என்று பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்களை நாங்கள் கூப்பிட வேண்டியது இல்லை. தானாக வந்துவிடுவார்கள். இந்த கட்சி விளங்கவே விளங்காது.. நாம மாட்டிக்கிடுவோம் என்று குறைந்தது இரண்டு மாதத்தில் வரப்போவது உறுதி.

அந்த வகையில் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் இருக்கிறது. நம்முடைய ஸ்டாலின் தான் முதல்வராக வருவார். யாராலும் தடுக்க முடியாது. அதிமுகவை விஜய்யால் அழிக்க முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. தலைவன் எங்கே வேண்டுமானாலும் ஓடலாம். தொண்டன் அங்கேயே இருப்பான். யாரை ஒழித்தால் சரியாக வரும் என்று தொண்டருக்கு தெரியும்.

உண்மையான அதிமுக தொண்டர்கள் திமுகவுடன் கை கோர்ப்பார்கள். திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது, திமுகவை அசைத்து பார்க்கலாம் என்று பார்த்தால் அசைத்து பார்க்க முடியாது. நான் எப்போதும் சொல்வேன்.. இன்னும் 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும். நான் சொல்வதை புரிந்தால் புரிந்து கொள்ளட்டும். தெரிந்தால் தெரிந்து கொள்ளட்டும். தவெக எம்.எல்.ஏக்கள் எப்போது ஓடலாம் என்று காத்து இருக்கிறார்கள்.

அதை தடுப்பதற்காக எங்களை காட்டி அவுங்களை பயமுறுத்துகிறார்கள்” இவ்வாறு அவர் பேசினார். தமிழகத்தில் தவெக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. விஜய் அரசுக்கு காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. விஜய்க்கு தனிப்பெரும்பான்மை இல்லை என்பதால் கூட்டணி ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறார். அதே நேரத்தில் விஜய் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் என்று திமுக, அதிமுக ஆருடம் கூறி வருகிறது.

பெரும்பான்மையை பெறுவதற்காக அதிமுக எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் நடத்தி தவெக தங்கள் பக்கம் இழுப்பதாக அதிமுக விமர்சித்து வரும் நிலையில், தவெக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றசாட்டு தமிழக அரசியலில் பரபர்பபை கிளப்பியுள்ளது. சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அரசுக்கு எதிராக வாக்களிக்க கோரி ஊத்தங்ககரை தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் முன் ஜாமீன் பெற்றுள்ளனர். தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் தானாகவே திமுக பக்கம் வருவார்கள் என்று அனிதா கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *