
Jammu and Kashmir | Article 370 | Supreme Court of India
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது…
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்தது. டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டம் 370-ஐ மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரித்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டம் 370-ஐ மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்துச் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
Jammu and Kashmir | Article 370 | Supreme Court of India
பல ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்தது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


