ரஷிய கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை.!

ரஷியாவிடம் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா, அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.

உக்ரைன் மீது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரஷியா போர் தொடுத்து வரும் நிலையில் போரை விரும்பாத அமெரிக்க அதிபர் டிரம்ப், போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் படி, ரஷியாவிடம் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, சுலோவாகியா, ஹங்கேரி, அஜர்பைஜான் ஆகிய 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கும் விதமாக மசோதா நிறைவேற்றப்படும் என  ஜனநாயக கட்சி செனட் உறுப்பினர் ரிச்சர்டு புளுமெந்தல் கூறியுள்ளார்.

லிண்ட்சே கிரஹம் கடந்த 11-ஆம் தேதி மரணம் அடைந்தைதையடுத்து, அவரது நினைவாக ‘லிண்ட்சே ஓ கிரஹம் ரஷிய பொருளாதார தடை சட்டம்-2026’ என்று மசோதாவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதா, 60-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவுடன் அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பொருளாதார தடை விதிப்பதன் மூலம், உக்ரைன் போரை நடத்த தேவையான நிதி, ரஷிய அதிபர் புதினுக்கு கிடைக்காமல் செய்ய வேண்டும் என்பதும் மசோதாவின் நோக்கமாகக் கருதப்படுகிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மற்றொரு நாட்டின் போர் முயற்சிகளுக்கு நிதி அளிக்கும் நாடுகளை தண்டிக்க வரிவிதிப்பை ஆயுதமாக பயன்படுத்துவதை முதல்முறையாக அமெரிக்க நாடாளுமன்றம் வெளிப்படையாக அங்கீகரிப்பதாக கருதப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *