88 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வந்துவிட்டது!

Advertisements

RBI | Indian 2000-rupee note

புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது...

புதுடெல்லி: மே 19ம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. மே மாதம் 23ம் தேதியிலிருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ம் தேதிவரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனையடுத்து, வங்கிமூலம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள சில வரம்புகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஒருவர் 20 ஆயிரம் என்ற அளவில் எத்தனை முறை வேண்டுமானாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றலாம் என்றும் அதற்கு அடையாள ஆவணமோ, சீட்டோ தேவையில்லையென ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், அறிவிப்பு வெளியான நாளிலிருந்து புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் சுமார் 75% திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது நாட்டில் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் சுமார் 88% நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஜூலை 31-ம் தேதிவரை ரூ.3.14 லட்சம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், 2018-19 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *