
தவெக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக் விஜய் பதவியேற்று 75 நாட்களை கடந்த நிலையில், திமுக , அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திமுகவினர் தவெக ஆட்சி குறித்து , தினம்தோறும் அதிகளவிலான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தவெக கூட்டணியில் இணைந்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுகவினருக்கு நேரடியாக ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.. அதாவது , நான் சவால் விடுகிறேன் மீண்டும் தேர்தல் வந்தால் விஜய் 180 தொகுதி வெற்றி பெறுவார்,நீங்கள் இந்த ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் , விஜய்க்காக தெருவுக்குத் தெரு வைகோ வருவான் என்று பதிலடி கொடுத்துள்ளார்..இது குறித்து விரிவாக பார்க்கலாம் தற்பொழுது …
சென்னை எழும்பூரில் மதிமுக ஏடான சங்கொலி 30 ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அப்போது நிகழ்ச்சியில் பேசிய மதிமுக பொது செயலாளர் வைகோ, கடந்த 15 20 நாட்களாக முதலமைச்சர்கள் விஜய் மீதும் அவருடைய அரசு மீதும் நாள்தோறும் விஷக்கனைகள் எதிரிகள் வட்டாரம் மட்டுமல்ல கூட்டணி கட்சிகள் வட்டாரத்திலிருந்தும் நாள்தோறும் பானங்களை உபயோகிக்கிறார்கள்.
கடந்த திமுக ஆட்சியில் இருந்தபோது உங்களுடைய பானங்கள் எங்கே போனது. திமுக கூட்டணியில் இருந்த போது இது போன்ற கண்டன குரல்கள் எழுப்பியது உண்டா ? கண்டன குரல் ஏன் அன்று எழவில்லை.இப்போது நாள்தோறும் அறிக்கை செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்று வைகோ கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து பேசியவர் நான் சொல்கிறேன் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கிற கட்சி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி.
தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி உடன் வந்து விட்டார்கள் அல்லவா ஒரு வார்த்தை விஜய் அரசை பற்றியோ அமைச்சரை பற்றியோ ஒரு விமர்சனம் வைத்தது உண்டா? கிடையாது.அரசு மீது விமர்சனம் என்றால் புகார் இருந்தால் அமைச்சரிடமும் முதலமைச்சரிடமும் கூற வேண்டும் தானே? ஏன் அறிக்கை செய்தியாளர்களை எல்லாம் சந்திக்கிறீர்கள்.. மூடிய தயவில் தானே விஜய் ஆட்சி நடத்துகிறார்..
எந்த நேரத்தில் வேணாலும் ஆட்சியை கலைக்கலாம் என்ற எண்ணம். ஒரு மிகப்பெரிய கூட்டணி தலைவர் கூறுகிறார் ஆறு மாதங்களில் மீண்டும் தேர்தல் வரும். அதற்கு என்ன திட்டம்? அப்படி என்ன ரகசிய உறவு? சும்மா லேசா மிரட்டி பாக்காதீங்க.. ஆட்சியை கவிழ்த்து விடுவோம் கவிழ்த்து விடுவோம் என்று.. பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைக்கப் போகிறீர்களா? செய்து பாருங்கள் நான் சவால் விடுகிறேன் என்று வைகோ கூறினார்.
மீண்டும் தேர்தல் வரட்டும் 108 இல்லை 180 இடங்களில் தமிழக வெற்றிக் கழக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.தொடர்ந்து தவெக ஆட்சி நீடிக்காது என்று கூறுவதற்கு அர்த்தம் என்ன? இன்று கரப்ஷன் என்ற ஒன்றை விஜய் அடியோடு அகற்றி உள்ளார். இதைவிட என்ன பெரியதாக சாதிக்க வேண்டும். ஒரு நேர்மையை நிலையான முயற்சிக்கின்ற ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்..
நேர்மைக்காக அரசியல் நடத்துகின்ற நானும் எனது இயக்கமும் அப்படி ஒரு ஆபத்து சொல்லும் ஆனால் அதை தடுப்பதற்கு நானும் என்னுடைய இயக்கமும் முதல் ஆளாக வந்து நிற்போம். தெருவுக்கு தெரு வைகோ வருவான் என்று கூறினார்.அதுவும் ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்களே பழம்பெழுத்து கொட்ட போட்டு தின்னு வயதான அதிகாரிகள் நினைக்கிறார்கள். மாதம் மாதம் லட்சக்கணக்கில் பணம் வந்து கொண்டிருந்தது .. தற்பொழுது மொத்தமாக நின்று விட்டது ஒன்றும் வரவில்லையே நாம் எதற்கு இந்த அரசாங்கத்தை நீடிக்க விட வேண்டும் என்று புலம்புகிறார்கள்..
இதற்கு காரணம் விஜய் ஆட்சியில் ஊழல் நடைபெறுவது கிடையாது. முன்பெல்லாம் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு லட்சக்கணக்கான படம் கொடுக்க வேண்டும் இப்போது பத்து பைசா கிடையாது..
தொடர்ந்து பணியாளர்கள் நியமிப்பதில் லஞ்சம் டிரான்ஸ்பர் பேரலஞ்சம் என அனைத்து துறையிலும் கடந்த ஆட்சியில் நடந்தது… இதுபோல் தற்பொழுது நடைபெற்ற முடியவில்லை.. அதனால் அரசு அதிகாரிகள் இந்த அரசுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் என்றார்கள் இது அனைத்தும் தனக்கு தெரியும் என்று கூறினார். இந்த அரசை செயல்படுத்து விடக் கூடாது என்று நினைப்பதாக கூறினார்.
இந்நிலையில் , தவெக அரசு மீது விமர்சனங்களை முன்வைக்கும் திமுகவினருக்குப் சரியான பதிலடியை கொடுத்துள்ளார் வைகோ . “தவெக ஆட்சி 6 மாதத்தில் கவிழும் என்று மிரட்டுபவர்களுக்கு நான் சவால் விடுகிறேன்; மீண்டும் தேர்தல் நடந்தால் விஜய் 180 இடங்களில் அமோக வெற்றி பெறுவார்” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், “ஊழலை அடியோடு ஒழித்து, நேர்மையான நிர்வாகத்தை விஜய் வழங்கி வருவதால்தான் எதிர்க்கட்சிகள் கோபமடைந்துள்ளனர்.
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் இந்த அரசுக்கு எதிராகப் புலம்புகிறார்கள்” என்று குற்றம் சாட்டிய வைகோ, இந்த ஆட்சியைத் தூக்கி எறிய யாராவது முயன்றால், அதைத் தடுக்க முதல் ஆளாகத் தான் வருவேன் என்றும் எச்சரித்தார்..



