ரவி மோகன் பிறந்தநாள் ஸ்பெஷல் – ‘An Ordinary Man’ படத்தின் சிறப்பு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகரும் இயக்குநருமான ரவி மோகன் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், அவர் இயக்கும் ‘An Ordinary Man’ திரைப்படத்தின் படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. இதையொட்டி, ரவி மோகனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, ‘An Ordinary Man’ திரைப்படத்தின் சிறப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். ‘கோமாளி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போதே, தான் இயக்கும் முதல் திரைப்படத்தில் யோகி பாபுவையே கதாநாயகனாக நடிக்க வைப்பதாக ரவி மோகன் உறுதியளித்திருந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி தற்போது ‘An Ordinary Man’ திரைப்படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ரவி மோகன் களமிறங்கும் இந்த திரைப்படம், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகி வருவதால், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

நடிகரும் இயக்குநருமான ரவி மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அவர் இயக்கும் ‘An Ordinary Man’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘Higher’ ப்ரொமோ இன்று மாலை 5.05 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. கெனிஷா பிரான்சிஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகராக மட்டுமின்றி தற்போது இயக்குநராகவும் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள ரவி மோகனுக்கு, ‘An Ordinary Man’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இதனால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *