Commercial Gas Cylinder Price: கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு!

சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1924.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த டிசம்பர் 22-ந்தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.39 குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.4.50 குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையில் மாற்றமின்றி ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலையில் சற்று குறைந்துள்ளதாக   தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் விலை 1,929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை  குறைக்கப்பட்டு 4.50 ரூபாய் குறைக்கப்பட்டு 1,924.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தான் வணிக கியாஸ் சிலிண்டர் விலையானது  கடந்த 22-ம் தேதி 39 ரூபாய் குறைக்கப்பட்டது. சில நாட்களுக்குள்ளாகவே மீண்டும் ரூ4.50 குறைக்கப்பட்டு 1,924.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகக் குறுகிய இடைவெளியில் இரண்டாவது முறையாக விலை குறைப்பு வியாபரிகளை மகிழ்ழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல், 14.2 கிலோ எடையுள்ள கியாஸ் சிலிண்டர் விலை 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *