தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்லும் என்று எடப்பாடி கணிப்பு!

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்லும் என்றும், அதிமுக தனிப் பெரும் கட்சியாகப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்னும் பெயரில் பரப்புரைப் பயணம் செய்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணத்திற்காக வந்த எடப்பாடி பழனிச்சாமிக்குக் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் செய்திருந்தார். கீழ்ப்பெண்ணாத்தூர் காவல் நிலையம் எதிரே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.

அப்போது தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களுடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்லும் என்றும், அதிமுக தனிப் பெரும் கட்சியாகப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் பெருமிதமாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *