தேசியத் தலைவர் படத்தை ஜாதியத் தலைவரின் படமாக கூறுவதாக நடிகர் பஷீர் பேச்சு..!

Advertisements

சென்னையில் உள்ள திரையரங்குகில் திரையிட தயங்குகின்றனர் என்றும், இது ஜாதியத் தலைவரின் படம் என்றும் தெரிவிக்கின்றனர் எனவும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடிகர் பஷீர் தெரிவித்துள்ளார்.

தேசியத் தலைவர் தேவர் பெருமகன் என்ற படத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக நடித்த பஷீர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, தேசியத் தலைவர் தேவர் பெருமான் என்ற திரைப்படம் சாதிய படம் கிடையாது, தேசிய தலைவரின் படம் என்றும், நான் தேவராக நடித்தது என்னுடைய பூர்வஜென்ம பாக்கியம் என்றும். வாழ்க்கை முழுவதும் அவருக்கு கடமைப்பட்டுள்ளேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஒருசில மர்ம நபர்களால், எனக்கு அச்சுறுத்தல் உள்ளது எனவும், எனது வீட்டிற்கு வந்து, எனது காரின் ஓட்டுநரை மிரட்டுகிறார்கள் எனவும், என்னை அடித்துவிடுவேன் என்றும் காரின் கண்ணாடியை உடைத்து விடுவேன் என்றும் மிரட்டுகின்றனர்,அதற்கெல்லாம் நான் பயந்தவன் அல்ல என்றும் நடிகர் பஷீர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படத்தை முதலமைச்சர் பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *