1,705 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி திறந்து வைத்தார்.!

Advertisements

தருமபுரி மாவட்டத்தில் 1,705 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்துப் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தருமபுரியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 1,705 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்துப் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஒகேனக்கல்லையும் தருமபுரியையும் இணைக்கும் மாவட்ட நெடுஞ்சாலையில் தருமபுரி ஆட்டுக்காரம்பட்டி முதல் பெண்ணாகரம் வரை 25 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைப்பகுதி 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்போதுள்ள இருவழித்தடத்தில் இருந்து நால்வழிச்சாலையாக மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
அதிக அளவில் புளி விளைவிக்கின்ற தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் 11 கோடியே 30 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வள்ளிமதுரைக் குடிநீர் வழங்கல் திட்டம் மேம்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். வேளாண் பெருங்குடி மக்கள் இணையவழியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில்  விண்ணப்பித்து, ஒரே நாளில் பயிர்க்கடன் பெறும் நடைமுறையை முன்னோடித் திட்டமாகத் தொடக்கி வைத்தார். அதியமான்கோட்டையில் தொடங்கியிருக்கும் உழவர் நலன் காக்கும் இந்த முன்னோடித் திட்டம், விரைவில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *