Thada Periyasamy: முரசொலி நிலம் சம்பந்தமாக அறிவிப்பை வெளியிட வேண்டும்!

Advertisements

சமூக நீதி பேசும் திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் முரசொலி நிலம் பட்டியல் சமுதாயத்திற்கு சொந்தமான நிலமென்று அறிவிப்பை வெளியிட வேண்டும் இல்லை என்றால் அவர் பின்னடைவையும் சரிவையும் சந்திப்பாரெனப் பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சேத்தியாத்தோப்பு தனியார் திருமண மண்டபத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்: முரசொலி நிலம் சம்பந்தமாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தை சுட்டிக்காட்டி செய்தியாளர்களிடம் பேசிய அவர்.

தமிழகத்திலேயே பரபரப்பாகப் பேசப்பட்ட முரசொலி மூல பத்திரம் எங்கே என்கின்ற ஒரு செய்தி எல்லாருக்குமே தெரியும் அந்த வகையில் முரசொலி நிலத்தினுடைய மூல பத்திரம் மட்டுமல்ல அந்த நிலம் பட்டியல் சமுதாயத்திற்கு சொந்தமானதா இல்லையா என்கிற ஒரு பெரிய விவாதம் தமிழகம் முழுக்க நடந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இந்த நிலம் சம்பந்தமான ஒரு விசாரணையைக் குறிப்பா எங்கள் கட்சியைச் சார்ந்த ராம சீனிவாசன் புகார் கொடுத்திருந்தார். நானும் அது சம்பந்தமாகப் புகார் கொடுத்திருந்தேன். இது சம்பந்தமான ஆணையம் விசாரணை செய்தது விசாரணை செய்யும்பொழுது குறிப்பா அரசு அதிகாரிகள் சென்னையிலேயே பஞ்சமி நிலமே இல்லை அப்படி என்ற ஒரு வார்த்தை முன் வைத்தனர்.

ஆனால் அதற்கான ஆவணத்தை நான் கொடுத்ததின் அடிப்படையில் வழக்கு மீண்டும் தொடர்ந்தது விசாரணை சென்று கொண்டிருந்தது உடனே முரசொலி அலுவலககாரர்கள் விசாரணையைத் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் விசாரணை இருக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்கினுடைய தீர்ப்பு நேற்று உயர் நீதிமன்றத்தில் வந்தது தீர்ப்பில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை புதியதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனச் சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து.

இருக்கிறது பொதுவா அறிவிப்பு தந்து இது சம்பந்தமான ஆவணங்களைத் திரட்டி இதற்கு ஒரு நல்ல முடிவு காண்பதற்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முடிவெடுக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் கூறி இருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய வெற்றி தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்கக் கூடாது என்று அரசு தரப்பிலிருந்து வாதம் வைக்கப்பட்டது.

ஆனால் விசாரிக்கலாம் என்று ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது மீண்டும் நாங்கள் முறையீடு செய்வோம் கண்டிப்பாக அந்த முரசொலி நிலம் என்பது பட்டியல் சமுதாயத்திற்கு சொந்தமான நிலம் என்பது நிரூபிக்கப்படும் அன்றைக்கு கண்டிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் ஸ்டாலின் கண்டிப்பாகப் பின்னடைவை சரிவைச் சந்திப்பார் என்ற செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முரசொலி நிலம் பட்டியல் சமுதாயத்திற்கு சொந்தமா இல்லையா என்ற ஒரு விவாதம் வந்திருக்கும் நிலையில் சமூகநீதி பேசும் ஸ்டாலின் உடனடியாக இந்த நிலம் பட்டியல் சமுதாயத்திற்கு சொந்தமானது என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *