டிரம்ப்பை பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முனீா் நேற்று நேரில்  சந்தித்துப் பேசினாா்.!

அமெரிக்க அதிபா் டிரம்ப்பை பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முனீா் நேற்று நேரில்  சந்தித்துப் பேசினாா்.

ஈரானுடன் பாகிஸ்தான் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பில், இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து, போர்  நிறுத்ததில், இந்தியாவில் எப்படி பிரதமா் மோடி பங்காற்றினாரோ,  அதேபோன்று பாகிஸ்தானில் முனீா் பங்காற்றினாா் என தெரிவித்தார். இதையடுத்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து தாக்குதல் நடத்தலாம், நடத்தாமலும் இருக்கலாம் என்று நிலையற்ற பதிலை கூறியுள்ளார்.

முன்னதாக பாகிஸ்தானின் ராணுவத் தலைமை தளபதிகளாக இருந்த அயூப் கான், ஜியா உல்-ஹக், பா்வேஸ் முஷாரஃப் ஆகியோா் அமெரிக்க அதிபா்களைச் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *