Advertisements

நைஜீரிய ஜனாதிபதி போலா தினுபு அரசின் தாக்குதலில் பயங்கரவாதிகள் 35 பேர் உயிரிழந்து உள்ளனர் .
நைஜீரிய ஜனாதிபதி போலா தினுபு தலைமையிலான அரசு, பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில், அபுஜா, மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த மோதலால், அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு 35 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மேலும், இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து சென்றுள்ளதாக ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில், நாட்டின் வடகிழக்கே போர்னோ மாகாணத்தில் போகோஹரம் பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு அந்நாட்டின் ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதில்,கும்ஷே பகுதியில் நான்கு இடங்களை இலக்காக கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதுவரை , 35 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று நைஜீரிய விமான படையின் செய்தி தொடர்பாளர் எஹிமென் எஜோடேம் தெரிவித்துள்ளார்.
இந்த நைஜீரிய அரசு தொடர்ந்து தாக்குதல்களை கட்டுப்படுத்த நிலையிலும் பயங்கரவாதிகளும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisements


