அமித்ஷாவுடன் EPS இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை.!

Advertisements

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிச்சாமி தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல்  வெளியாகிவுள்ளது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக –  பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சரும், பாஜக தமிழக தோ்தல் பொறுப்பாளருமான பியூஷ்கோயல் இன்று இரவு சென்னை வருகிறார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை திடீரென டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து, அவர் அதிமுக – பாஜக பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது. இதனால், அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *