பிரதமர் மோடி மசோதாவுக்கு சம்மதம் தெரிவித்தார் – கிரண் ரிஜிஜு

 பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதவி பறிப்பு மசோதாவில் பிரதமர் பெயர் சேர்க்கப்பட வேண்டாம் என்பதை மோடி ஏற்கவில்லை என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதவி பறிப்பு மசோதாவில் முதல்வர்கள், அமைச்சர்கள், ஐந்து ஆண்டு தண்டனைப் பெறக்கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களின் பதவித் தானாகவே பறிபோகிவிடும்.
இந்நிலையில், இந்த மசோதாவில் பிரதமர் பெயர் சேர்க்கப்பட வேண்டாம் என மந்திரி சபையில் ஆலோசனைகளை வழங்கினர்.
இதற்கு பிரதமர் நானும் ஒரு குடிமகன், இதனால் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறப்பு பாதுகாப்பு இருக்கக் கூடாது என்றுக் கூறி ஆலோசனையை ஏற்க மறுத்தார்.
பின்னர் மசோதாவில் பிரதமர் பெயர் சேர்க்கப்பட்டு மசோதாவுக்கு சம்மதம் தெரிவித்தார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *