தேர்தல் களத்தில் வேகம் எடுக்கும் தவெக..!

தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நாளை  மாலை 4 மணி அளவில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொள்ளும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே அழைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட கழகச் செயல்வீரர்கள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *