
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி 13,14,15 வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நெல்கட்டும் சேவல் சாலையில் உள்ள மயானத்தில் ஈமச்சடங்களை செய்து வருகின்றனர் இந்த மயானத்தில் எந்த ஒரு மின்விளக்கு வசதியும் இல்லாமல் இருட்டில் ஈமச்சடங்குகளை செய்யும் சூழ்நிலை உள்ளது.
மேலும் மயானத்தில் சடங்கு மற்றும் சம்பிரதாயம் எதுவென்றாலும் வீட்டில் இருந்து டார்ச் லைட் கொண்டு சென்று சடங்களை செய்து வருகின்றனர்
மயானத்தில் மின்விளக்கு என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக உள்ளது எனவே பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக வாசுதேவநல்லூர் பேரூராட்சி பொதுமக்கள் பயன்படுத்தி வரும் மயானங்களில் மின்விளக்கு இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அரசு ஆணை எண் 73 நாள் 11-06- 18 மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எண் W.P.NO.20527 OF 2014 ன் படிஉயர் நீதிமன்ற உத்தரவையும் அரசு வெளியிட்ட ஆணையம் செயல்படுத்த தவறிய வாசுதேவநல்லூர் பேரூராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு இயந்திரம் என்பது மக்களுக்காக செயல்படும் ஒன்று.இந்த அரசு இயந்திரம் மக்களுக்கு சேவை செய்ய தவறும் அதிகாரிகள் மக்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும் எனவும் மேலும் ஒரு மனிதன் மரணித்த பிறகு கடைசியாக செல்லும் இடம் சுடுகாடு அந்த சுடுகாட்டில் கூட இருட்டில் தான் ஈமச்சடங்கு செய்யும் சூழ்நிலை தற்போது நிலவு வருகிறது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

