
புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட நவாச்சாலையை அருகே விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையால் விவசாயிகள் வேதனைஅடைந்துள்ளார்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட நவச்சாலை அருகேமேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை கூட்டம், உணவுதேடிமலையடிவார விளை நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி விளைநிலங்களில் யானைகள் புகாமல் தடுக்க விவசாயிகள் தங்கள் நிலங்களைச் சுற்றி சோலார் வேலி அமைத்துக் காவல் காத்து வருகின்றனர்.
இருப்பினும் யானைகள் வேலிகளை உடைத்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன.இந்நிலையில் புளியங்குடி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த வேல் சாமி என்பவருக்குச் சொந்த மான மேற்குத் தொடர்ச்சி மலை செல்லும் புளியங்குடி பீட் பகுதியில் உள்ள 4 ஏக்கர் வயலில் நேற்று முன் தினம் நள்ளிரவு 12 மணி யளவில் 5 யானைகள்மற்றும்குட்டியுடன் புகுந்தது. அங்கு
அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்களை முழுவதுமாகச் சேதப்படுத்தியது. வாழைகளை பிடுங்கி நாசம் செய்ததுடன். சோலார்வேலிகளையும்சேதப்படுத்தி உள்ளது.நேற்று காலை வேல் சாமி வயலுக்குச் சென்றபோது நெற் பயிர்கள் முழுவதும் நாசமாகியிருப்பது கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.
உடனடியாகப் புளியங்குடி வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்துத் தங்களது அச்சத்தை போக்க வேண்டும் என விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


