இறந்த மகனின் சடலத்துடன் 3 நாட்களாக பசியால் தவித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி.

Advertisements

ஐதராபாத்: ஜெய்ப்பூர் ஆந்திரா காலனியில் ரமணா (65), சாந்தகுமாரி (60) என்ற பார்வையற்ற வயதான மாற்றுதிறனாளி தம்பதியினர் தங்கள் இளைய மகனுடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூத்த மகன் பிரதீப் மனைவி குழந்தைகளுடன் வேறு இடத்தில் வசித்து வருகிறார்.

இளைய மகன் பிரமோத் கருத்து வேறுபாட்டால் அவரது மனைவி அவரை விட்டுச் சென்றுவிட்டார். பெயிண்டர் வேலை செய்யும் அவர் மதுவுக்கு அடிமையானலும் தனது பார்வையற்ற பெற்றோரை நல்லபடியாகக் கவனித்து கொண்டு வந்ததாகத் தகவல். இந்நிலையில் பிரமோத் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மது போதையில் வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு உணவு வழங்கிப் பின்னர் தூங்க சென்றுள்ளார். அதன் பிறகு தூக்கத்திலேயே பிரமோத் உயிரிழந்துவிட்டார். இதனை அறியாத பார்வையற்ற பெற்றோரால் தங்கள் மகன் இறந்துவிட்டதை அடையாளம் காண முடியவில்லை. எத்தனை முறை போனில் யாரை அழைத்தாலும் பதில் சொல்லவில்லை. உணவு, தண்ணீரின்றி தவித்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் கூட யாரும் வந்து பார்க்க வரவில்லை. இந்நிலையில் வீட்டில் பிரமோத் இறந்து மூன்று நாட்கள் அனதால், சடலம் அழுகியது. துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போலீசுக்கு அதிர்ச்சி ஒரு பக்கம் பசியால் துடிக்கும் வயதான மாற்றுதிறனாளி தம்பதி, மறுபுறம் தாங்க முடியாத துர்நாற்றம் எனத் தவித்தவர்களை வீட்டின் வெளியே அழைத்து வந்து அவர்களைக் குளிப்பாட்டி உணவு வழங்கினர். பின்னர் அவர்களின் இளைய மகன் பிரமோத் இறந்தது குறித்து தெரிவித்தனர்.

பிரமோத்திற்கு வலிப்பு நோய் உள்ளதால் தூக்கத்தில் இருக்கும்போது வலிப்பு ஏற்பட்டு பிரமோத் உயிரிழந்திருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது.

பிரேத பரிசோதனைக்குப் பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் மற்றொரு மகன் பிரதீப்பை வரவழைத்த போலீசார் வயதான தம்பதியை அவரிடம் ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவம் மக்களை மனமுடைய செய்துள்ளது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *