ஆமதாபாத்தில் விமான விபத்துக்குள்ளான பகுதியை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு

ஆமதாபாத்தில் விமான விபத்துக்குள்ளான பகுதியை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

நேற்று மதியம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்திய விமானம், விபத்துகுள்ளானதில், குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்பட 241 பேர் உயிரிழந்தனர். இதில் அதிர்ஷ்டிவசமாக ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.

மருத்துவ கல்லூரி மீது விமானம் மோதியதில் சில கல்லூரி மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.  இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோர், விபத்து நடந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், விமான விபத்து நடந்த பகுதியில் ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி இன்று ஆமதாபாத் செல்கிறார். அங்கு அவர் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *