பொருளாதார ஆலோசாராகர் பிபேக் டெப்ராய் மறைவிற்கு பிரதமர் இரங்கல்!

Advertisements

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசகர் பிபேக் டெப்ராய் (69) குடல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை 7 மணிக்கு உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டாக்டர். பிபேக் டெப்ராய் ஜி ஒரு உயர்ந்த அறிஞராக இருந்தார். பொருளாதாரம், வரலாறு, கலாசாரம்,அரசியல், ஆன்மீகம் என பல துறைகளில் நன்கு அறிந்தவர். அவரது படைப்புகள் மூலம் இந்தியாவின் அறிவுசார் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளார். பொதுக்கொள்கையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு அப்பால், நமது பழங்கால நூல்களை இளைஞர்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதில் அவர் மகிழ்ச்சியாக பணியாற்றினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *