America : துப்பாக்கியுடன் நுழைய முயன்ற வாலிபர் கைது.!

Advertisements

அமெரிக்க பாராளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற வாலிபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாராளுமன்றத்தின் மேற்கு பகுதியில், வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் பாராளுமன்றத்துக்குள் நுழைய முயன்றார்.

அப்போது, அங்கிருந்தப் பாதுகாப்பு அதிகாரிகள் உடனே அந்த வாலிபரை சுற்றி வளைத்து ஆயுதத்தை கீழே போடும்படி உத்தரவிட்டனர். இதன்படி, வாலிபர் துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு படுத்துக்கொண்டார்.

தொடர்ந்து, காவல்துறையினர் வாலிபரை கைது செய்து, அவரின் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, காவல்துறையினர் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *