Advertisements

கோவையில் அப்துல் கலாம் பிறந்த நாளில் centre for ethics in politics என்ற பெயரில் மையம் ஒன்றை வைத்து நாட்டுக்காக அர்பணிக்க இருப்பதாக நாம் தலைவர் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 11ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாம் தலைவர் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் மாணவராக இருந்தபோதே அப்துல் கலாமின் பேச்சைக் கேட்டு வளர்ந்தவன் என்றும் எனவே, அவரது வழியில் நாம் தலைவர் இயக்கத்தை நல்வழிநடத்த முடிவு செய்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.
அப்துல் கலாம் அரசியலில் நன்நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்பதை விரும்பி அதற்காக அன்றே புத்தகம் எழுதியவர் என்று கூறினார். கோவையில் வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி centre for ethics in politics என்ற பெயரில் மையம் ஒன்றை வைத்து நாட்டுக்காக அர்பணிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழக அரசின் செயல்பாடு தற்போது எப்படி இருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்திருப்பதால் அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறினார்.
Advertisements


