ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை.!

Advertisements

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து தீர்வு காணவில்லை என்றால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஈரான், அமெரிக்கா இடையில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, பேச்சுவார்த்தை சில வழிகளில் நன்றாக இருந்தது என்றும் ஆனால், அதிபர் டிரம்ப் வகுத்துள்ள சில எல்லைக்கோடுகளுக்கு ஈரான் இன்னும் அங்கீகரிக்கத் தயாராக இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து தீர்வு காணவில்லை என்றால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கையை மீண்டும் துணை அதிபர் வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி செய்தியாளர்களிடம் பேசியபோது, இரு நாடுகளும் மோதலைத் தவிர்ப்பதற்கான சில வழிகாட்டுதல் கொள்கைகளில் உடன்பாட்டிற்கு வந்துள்ளது எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *