United States vs Pakistan:பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த அமெரிக்கா!

Advertisements

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 11ஆவது போட்டியானது டிரா ஆன நிலையில் சூப்பர் ஓவரில் அமெரிக்கா வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைத்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 11ஆவது போட்டி டல்லாஸில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

முகமது ரிஸ்வான் 9 ரன்களில் ஆட்டமிழக்க, உஸ்மான் கான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ஃபகர் ஜமான் 11 ரன்களில் வெளியேறவே, ஷதாப் கான் ஓரளவு ரன்கள் எடுத்துக் கொடுத்து 40 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆசம் கான் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். கேப்டன் பாபர் அசாம் கடைசி வரை நிதானமாக விளையாடி 43 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இஃப்திகார் அகமது 18 ரன்களில் ஆட்டமிழக்க, ஷாஹீன் அஃப்ரிடி 23 ரன்களும், ஹாரீஷ் ராஃப் 3 ரன்களும் எடுக்கவே பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் அமெரிக்கா அணியில் நோஸ்துஷ் கென்ஜிகே 3 விக்கெட்டும், சவுரவ் நெட்ராவால்கர் 2 விக்கெட்டும், அலி கான் ஒரு விக்கெட்டும், ஜஸ்தீப் சிங் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் கடின இலக்கைத் துரத்திய அமெரிக்கா அணியில் ஸ்டீவென் டெய்லர் 12 ரன்களில் வெளியேற, ஆண்ட்ரீஸ் கௌஸ் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஃப்திகார் அகமது 18 ரன்களில் ஆட்டமிழக்க, ஷாஹீன் அஃப்ரிடி 23 ரன்களும், ஹாரீஷ் ராஃப் 3 ரன்களும் எடுக்கவே பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.

பின்னர் கடின இலக்கைத் துரத்திய அமெரிக்கா அணியில் ஸ்டீவென் டெய்லர் 12 ரன்களில் வெளியேற, ஆண்ட்ரீஸ் கௌஸ் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 12 பந்துகளுக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை ஷாஹீன் அஃப்ரிடி வீசினார்.

அந்த ஓவரில் 7 ரன்கள் மட்மே எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் அமெரிக்காவின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. ஹரீஷ் ராஃப் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் எடுக்கப்பட்டது. 4 ஆவது பந்தில் சிக்ஸர் அடிக்கப்பட்டது. 5ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது.

கடைசி பந்தில் அமெரிக்காவின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. சிக்ஸ் அடித்தால் வெற்றி, பவுண்டரி என்றால் போட்டி டிரா என்ற நிலை இருந்தது. கடைசியாகப் பவுண்டரி அடிக்கப்படவே போட்டியானது டிரா செய்யப்பட்டது. இதையடுத்து சூப்பர் ஓவர் நடந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணியில் ஆரோன் ஜோன்ஸ் மற்றும் ஹர்மீத் சிங் இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இதில், ஒரு பவுண்டரி, 3 வைடு உள்பட மொத்தமாக 18/1 ரன்கள் எடுக்கப்பட்டது.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் இஃப்திகார் அகமது மற்றும் ஆசம் கான் இருவரும் களமிறங்கினர். சவுரவ் நெட்ராவால்கர் சூப்பர் ஓவரை வீசினார். அந்த ஓவரில் இஃப்திகார் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஷதாப் கான் 7 ரன்கள் எடுத்துக் கொடுக்கப் பாகிஸ்தான் சூப்பர் ஓவரில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலமாகப் பலம் வாய்ந்த பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் அமெரிக்கா வீழ்த்திச் சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாகக் கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது டிரா ஆனது. இதில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் அணி வெற்றி பெறும் என்று அறிவிக்கப்படவே, இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா vs பாகிஸ்தான், டர்பன், 2007

இலங்கை vs நியூசிலாந்து, பல்லேகலே, 2012

நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், பல்லேகலே, 2012

நமீபியா vs ஓமன், பிரிஜ்டவுன், 2024

அமெரிக்கா vs பாகிஸ்தான், டல்லாஸ், 2024*

இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 9ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் 19ஆவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *