
தொடர்ந்து எட்டு நாட்களாகப் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிப் போராடி வரும் நிலையில் அவர்களின் கோரிக்கைகளை திமுக அரசு கண்டுகொள்ளாததற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோருவது தவறா? என்று வினவியுள்ளார்.
போராடும் ஆசிரியர்களை வதைத்தது போதாதென்று, ஆசிரியர்கள் போராட்டத்தை ஒளிப்பதிவு செய்த செய்தியாளர்களையும் காவலர்கள் தள்ளி விட்டிருப்பது திமுக அரசின் அராஜகத்தைத் தெளிவாக வெளிக்காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வதாகக் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.




