தேவையின்றி இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு வர வேண்டாம்..!

Advertisements

இன்றியமையாத் தேவையின்றி இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு வர வேண்டாம் என்று அங்குள்ள இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஈரானில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள செய்தியில், ஈரானில் கடந்த சில வாரங்களாக நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருதி, இன்றியமையாத் தேவைகள் இல்லாமல் யாரும் ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஈரானில் நிலவும் பாதுகாப்புச் சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கவனித்தும், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைப் படித்தும் முடிவெடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

ஈரானில் ஏற்கெனவே இருக்கும் இந்தியர்கள், நாட்டைவிட்டு வெளியேற நினைத்தால் அவர்கள் பயணிப்பதற்காக விமானங்களும், கப்பலும் உள்ளதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *