Kerala : 5 மாவட்டங்களில் 581 பேருக்கு நிபா வைரஸால் பாதிப்பு..!

கேரளாவில் 5 மாவட்டங்களில் 581 பேருக்கு நிபா வைரஸால் பாதிப்பு என மாநில சுகாதாரத்துறைத்  தெரிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு வைரஸ் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் சமீப காலமாக நிபா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு பிளஸ்-2 மாணவி உள்ளிட்ட 2 பேர் பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் பலியானதைத் தொடர்ந்து மாநில சுகாதாரத்துறைத் தீவிர நடவடிக்கையில் இறங்கியது.

பின்னர் பாலக்காடு மாவட்டத்தில் 420 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 96 பேரும், மலப்புரம் மாவட்டத்தில் 63 பேரும், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் தலா ஒருவர் என 581 பேர் நிபா தொடர்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இவர்களில் 29 பேர் அதிக ஆபத்திலும், 78 பேர் ஆபத்தான நிலையிலும் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பின்னர் மலப்புரம் மாவட்டத்தில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களது உடல்நலம் குறித்து விசாரித்த மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தகுந்தச் சிகிச்சை அளிக்கவும் கட்டுப்பாடு மண்டலங்கள் அறிவிப்பது குறித்து முடிவுச் செய்ய மருத்துவ வாரியத்திற்கு அறிவுறுத்தினார்.

மேலும் கேரளாவின் தெற்குப் பகுதிகளுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு பரவ வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நோய்வவ்வால்கள் மூலமே பரவுவதாக கூறப்படும் நிலையில், நோய் தொற்றின் மூலத்தைக் கண்டறிவது மிகவும் சவலாலானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *