
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆசிரியர் மட்டுமல்லாது குடியரசுத்தலைவர். சிறந்த ஆளுமை, கல்வியாளர், மனித நேயம் மிக்க உன்னத மனிதர். பன்முகத் தன்மை கொண்டவர். இவரைச் சிறப்பிக்க இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்…
ஆசிரியப் பணி அறப்பணி.மாதா, பிதா, குரு, தெய்வம்.இந்த வரிசையில் பெற்றோர்களுக்கு அடுத்ததாகக் குரு அதாவது ஆசிரியப் பெருந்தகைகளுக்கு இடம் கொடுக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆசிரியர்களின் மேன்மையும், முக்கியத்துவமும் தெரிகிறது.

ஆசான் சொற்படி நடந்தால் ஆகாயத்தில் கூடக் கால் பதிக்கலாம் என்பது இப்போது உண்மையாக்கப்பட்டு இருக்கிறது.ஆம் நம் தமிழ் நாட்டு கல்வியாளர்கள், அறிவியல் அறிஞர்கள் ஆக உலகில் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.கல்வி ஒன்றே ஒருவனை மேம்படுத்தும்.
அப்படிப்பட்ட கல்வியை கற்றுத்தரும் ஆசிரியர்களை நாம் போற்றி கொண்டாட வேண்டிய நாள் தான் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி.ஆசிரியர் தினமாக அனைத்துக் கல்வி கூடங்களிலும் இந்த நாளை மாணவர்கள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடி ஆசிரியப் பெரு மக்களைச் சிறப்பித்து வருகிறோம்.

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவ ஞானியுமான டாக்டர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 – ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர் பணி என்பது வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் சார்ந்தது அல்ல. ஒழுக்கம், பண்பு ஆன்மீகம், பொது அறிவு, நீதி, நிதி, இரக்கம், கொடை, தியாகம், வாழ்க்கை, மனிதனின் வாழ்வியல் சிந்தனைகள், தொலை நோக்கு பார்வையென அனைத்து அம்சங்களையும் கற்றுத்தரும் ஒரு உயிருள்ள அறிவுப்பெட்டகம் தான் ஆசிரியர் என்பவர்.
தன்னலமற்ற, தியாகத்தின் உருவமாக, தெய்வப் பணி ஆற்றி வருபவர்கள் ஆசிரியர்கள்.ஒரு மாணவனை அவனுக்கே அடையாளம் காட்டுபவர் ஆசிரியரே.

கரடு முரடான கல்லை உளி கொண்டு செதுக்கி அழகிய சிற்பமாக வடிவமைக்கும் சிற்பிபோல் பால் மணம் மாறாத குழந்தையாகப் பள்ளியில் விடப்படும் குழந்தையை மாணவன் என்ற பெயர் கொடுத்து எழுத, படிக்கக் கற்றுக் கொடுத்து எண்ணையும் எழுத்தையும் இரு கண்கள் என்று போதித்து, பாட்டு, நடனம், இசை, ஓவியன், விளையாட்டு வீரன், கவிஞன் விஞ்ஞானி, எனப் பல வண்ணங்களில் பட்டாம் பூச்சியாய் சிறகடிக்க விடும் ஆசிரியர்கள் உலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம்.
மாணவன் முன்னேறுவதைக்கண்டு புளகாங்கிதம் அடையும் ஒரே உன்னத பண்புக் கொண்டவர்கள் ஆசிரியப் பெருந்தகைகள் மட்டுமே. பெற்றோர் மகிழ்ச்சியடைவதற்கு முன்பே ஆனந்தப்படுபவர் தான் ஆசிரியர்கள்.
ஏணிப்படியாக ஆசிரியர்கள் நின்ற இடத்திலேயே நிற்க, மேலே ஏறும் மாணவர்களோநாட்டின் தலைவனாக, அறிஞனாக, கவிஞனாக, கல்வியாளராக, பொறியல் வல்லுநர்களாக, உயிர் காக்கும் மருத்துவர்களாக, எழுத்தாளர்களாக, படைப்பாளர்களாகப் பரிணமளிக்கிறார்கள்.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான், கற்பித்தல் தொழில் புரியும் ஆசான் ஆகாயத்தை விட உயர்ந்தவர் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆசிரியர் மட்டுமல்லாது குடியரசுத்தலைவர். சிறந்த ஆளுமை, கல்வியாளர், மனித நேயம் மிக்க உன்னத மனிதர். பன்முகத் தன்மை கொண்டவர்.

இவரைச் சிறப்பிக்க இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இவர் 1988-ஆம் ஆண்டு செப்டெம்பர் 5-ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற ஊரில் பிறந்தார்.இவரின் பெற்றோர் வீராச்சாமி, சீதாம்மாள். தெலுங்கு இவரது தாய் மொழி.
ஒரு ஏழைக்குக் குடும்பத்தில் பிறந்த இவர் பள்ளிப் படிப்பைத் திருவள்ளூர், திருப்பதி ஆகிய ஊர்களில் படித்து, உயர் கல்வியை வேலூர் ஊரிஸ் கல்லூரியில் படித்தார்.சென்னை ப்ரெசிடென்ஸி கல்லூரியில் உதவி பேராசிரியராகவும், பின்பு கல்கத்தா பல்கலைக்கழத்தில் பேராசிரியாகப் பணியாற்றினார்.பிளாட்டோ, பிலோடிஸ், காந்த், பிராட்லி பெர்க்சன் போன்றவர்களின் தத்துவங்களை இந்தியாவில் இருந்த படியே உலகிற்கு தெரியப்படுத்தினார்.
ஐந்து முறை தத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.1952-ல் துணை குடியரசுத்தலைவராகவும், 1967-ல் குடியரசுத் தலைவராகவும் மக்கள் தொண்டு ஆற்றினார். கல்வியில் இவர் பெரும் புரட்சியை ஏற்படுத்தி மாணவர்களிடையே கற்கும் ஆவலை தூண்டினார்.
இவரின் பிறந்த நாளையே நாம் ஆசியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். தேசிய அளவில் இவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு, இவரைச் சிறப்பித்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியப் பெருந்தகைகளுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுவது சிறப்பு.வாழ்க ஆசிரியப்பணி. ஜெம் டிவியின் சார்பாக அனைத்து ஆசிரிய பெரு மக்களுக்கும் வாழ்த்துக்கள்.


