
வீட்டிற்கு அருகே அமர்ந்து மது அருந்தியதை தட்டி கேட்டதால் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
இது போன்று தமிழகம் முழுவதும் குடிபோதையால் கொலை அரங்கேறி வருகிறது…அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி குடிபோதையில் மகன் தந்தையை கொலை செயதார், ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி பொள்ளாச்சியை அருண்கார்த்திக் என்ற இளைஞர் நண்பர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார்,
ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி தஞ்சையை சேர்ந்த தங்கதுரை என்ற இளைஞன் மது போதையில் தனது மனைவியிடம் தகராறு செய்த தந்தை இளங்கோவனை கோடரியால் கொலை செய்தார், இது போன்று மார்ச் 19-ம் தேதி கோவை அருகே மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு முனியப்பன், கோபிநாத் மார்பில் கத்தியால் குத்தினார்,
ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சென்னை கொரட்டூரில் பிரியாணி கடையில் மது போதையில் ஏற்பட்ட வாய் தகராறில் பாலச்சந்திரன் என்ற பட்டதாரி இளைஞரை, இளைஞர்கள் மூன்று பேர் பதுக்கி வைத்திருந்த கத்தியால் கொலை செய்தனர்.
ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்த கோபி என்ற வாலிபரை அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சன், சிவா என்ற இருவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தனர்.
ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சேலம் ஆத்தூரில் ஒன்றாக மது அருந்தியபோது 55 வயதான சந்திரன் மற்றும் 54 வயதான முருகேசன் ஆகியோருக்கு வாய் தகராறு ஏற்பட்டது அப்போது முருகேசன் தான் வைத்திருந்த அரிவாளால் சந்திரனை வெட்டிக் கொலை செய்தார்.
ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் கருநீர் கிராமத்தைச் சேர்ந்த புருசோத்தம்மன் குடிபோதையில் மின்சார விசிறி வயரால் மனைவி முனியம்மாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தப்பியோடினார்.
ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குழியில் குடிக்கு அடிமையாகி ரகளை செயும் மகனைப் பெற்றோர்களே சேர்ந்து கொலை செய்தனர்ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் இரணியலை சேர்ந்த சகோதரர்கள் ஜேம்ஸ்ராஜா, சகாய ராஜா ஆகியோர் சேர்ந்து மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கோபமடைந்த ஜேம்ஸ் சகாயத்தை கொலை செய்தார்.
ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி காஞ்சிபுரத்தில் குவாட்டரை அப்படியே குடித்துவிட்டதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் முதியவரைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.மதுவினால் இத்தனை உயிர் பறிபோகும் நிலையில் தமிழக அரசானது விரைந்து மது கடைகளை மூட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
இப்படி கொலை களமாக மாறிவரும் தமிழகத்தில் ஒரே மாதத்தில் இத்தனை கொலை நடைபெற்றுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் இது போன்ற கொலைகள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு என்னதான் முடிவெடுக்கும் என்பதை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்கள்.

