
பன்றி காய்ச்சல் பரவலின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லையென, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்…
சென்னை: ஓமந்தூரார் அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் வெற்றிகரமாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யபட்டு, உடல் நலம் தேறி வரும் நபரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓமந்தூரார் அரசு பண்ணோக்கு மருத்துவமனையில் தொடர்ந்து 11 ஆம், இருதய மாற்று அறுவைசிகிச்சை செய்த நபர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார் என்றும், ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த நபரின் இருதயம், புதுக்கோட்டையை சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கு மாற்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறினார்.
மேலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் டானட்டை பொறுத்தவரை, இந்தியாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் உறுப்புத் தானம் உரிமை பெற்ற மருத்துவமனைகள் மற்றும் மையங்கள் தற்போது 27 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பன்றி காய்ச்சல் பரவலின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

