Sallallahu Alaihi Wasallam: முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் அல்லாஹ் ஒன்று திரட்டுவான்!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்…

நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன் அது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா அந்நாளில் மனிதர்களில் முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் அல்லாஹ் ஒன்று திரட்டுவான்

அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதை அவர்கள் செவியேற்க முடியும் பார்ப்போரின் பார்வை அவர்களை ஊடுருவிச் செல்லும் சூரியன் அவர்களுக்கு அருகில் வரும் அப்போது மனிதர்களிடம் அவர்களால் தாங்கிக் கொள்ளவும் சகித்துக் கொள்ளவோ இயலாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும் அப்போது மனிதர்களுள் சிலர் சிலரை நோக்கி நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் அவல நிலையைக் கவனிக்கவில்லையா.

உங்களுக்கு எத்தகைய ஆபத்தான நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கவில்லையா உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரைத் தேடி பார்க்க மாட்டீர்களா என்று கேட்பார்கள் அப்போது மனிதர்களுள் சிலர் சிலரிடம் ஆதி மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்லுங்கள் அவர் உங்களுக்காகப் பரிந்துரை பேசுவார் என்று கூறுவர் ஆகவே மனிதர்கள் ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று ஆதமே நீங்கள் மனித இனத்தின் தந்தை ஆவீர்கள் உங்களை அல்லாஹ் தனது கரத்தால் படைத்தான் தன்னால் உருவாக்கப்பட்ட உயிரை உங்களுக்குள் அவன் ஊதினான்.

வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியும்படி பணித்தான் நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் அவல நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா என்று கேட்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *