Tamilnadu : தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை..எங்கெல்லாம் ஆரஞ்சு அலெர்ட்!

Advertisements

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்குகிறது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வந்த நிலையில் இன்று முதல் அது விலகக்கூடும் என்றும்,  புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, கர்நாடகா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.

சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. முதல் நாளான இனறு சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பொழிந்து வருகிறது.

மேலும் அரபிக் கடலின் தென்கிழக்கு பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவி வருகிறது. எனவே தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வரும் அக்டோபர் 19 அன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கன மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை இன்று முதல் தீவிரமடையும் நிலையில் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய பகுதிகளில்  கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்றும் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இந்த நான்கு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருப்பூர், கோவை, ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் கனமழை கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை மறுநாள் அக்.18 நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூ,ர் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தீபாவளி நாளான அக்டோபர் 20 அன்று நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து வடசென்னை மற்றும் கடலோரப் பகுதிகளில் 100 மில்லி மீட்டர் மழை பொழிந்ததாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இந்த மழையின் தீவிரம் வரும் நாட்களில் படிப்படியாக அதிகரிக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்னை மற்றும் புறநகரப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்,  பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

தேனி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. தேனி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, தென்காசி, நெல்லை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.தேனி, தென்காசி, நெல்லை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோன்று கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கோவையில் கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், அன்னூர், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி சுற்றுவட்டாரத்தில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் காணப்பட்டது. இதற்கிடையே கோவையில் கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், அன்னூர், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி சுற்றுவட்டாரத்தில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் காணப்பட்டது.

இதேபோல், சென்னை புறநகரில் நேற்று பகல் நேரத்தில் கனமழை பெய்தது. ஆவடி, அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு நேரத்தில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதேபோல், சென்னை புறநகரில் நேற்று பகல் நேரத்தில் கனமழை பெய்தது. ஆவடி, அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இரவு நேரத்தில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்தது.
இன்றும் சென்னையில் மழை பெய்தது. மழைக்கு நடுவே அவ்வப்போது வெய்யிலும் அடித்து வருகிறது. இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், “வெயில் இருக்கும், திடீரென திடீர் மழை பெய்யும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும். இன்றும் சென்னையில் மழை பெய்தது. மழைக்கு நடுவே அவ்வப்போது வெய்யிலும் அடித்து வருகிறது.

இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், “வெயில் இருக்கும், திடீரென திடீர் மழை பெய்யும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும். எனவே வெயில் இருந்தாலும் உங்கள் ரெயின் கோட்டை உடன் எடுத்துச் செல்லுங்கள். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் அக்டோபர் 23 முதல் 30 வரை அதிக மழை பெய்யும். மேலும் வங்காள விரிகுடாவில் சக்கரம் அதிக மழை பொழிவுக்கான குறியீடு உருவாகும் வாய்ப்பு உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் அக்டோபர் 23 முதல் 30 வரை அதிக மழை பெய்யும் என்றும்  வங்காள விரிகுடாவில் அதிக மழை பொழிவுக்கான குறியீடு உருவாக வாய்ப்பு உள்ளது” என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *