
இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் வரலாற்று மற்றும் சமகால சிறப்புமிக்க நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்று இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் துணை ஜனாதிபதி ஷிபோகோசா பவுலஸ் மஷாடில், ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தார். இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் வரலாற்று மற்றும் சமகால சிறப்புமிக்க நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், இரு நாடுகளும் உலகளாவிய தெற்கின் முன்னணி குரல்களாகத் திகழ்கின்றன என்றும் ஜனாதிபதி கூறினார்.
இருதரப்பு வர்த்தகத்தின் சீரான வளர்ச்சியை அவர் குறிப்பிட்டார். மேலும், தொழில்நுட்பம், மருந்துத் துறை, எரிசக்தி, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் இரு தரப்பினரும் பரஸ்பரம் பயனளிக்கும் ஈடுபாட்டைத் தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.


