முஸ்லிம்கள் ஹஜ் புனித யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு – கிரண் ரிஜிஜு பேச்சு.!

Advertisements

ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் புனித யாத்திரையை வெற்றிகரமாக நிறைவுச் செய்து வருவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

தில்லியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் புனித யாத்திரையை வெற்றிகரமாக நிறைவுச் செய்து, பாதுகாப்பாகத் தங்கள் இல்லங்களுக்குத் திரும்புவதை உறுதி செய்ய இந்திய அரசு முழுமையாக முயன்று வருகிறது என்று தெரிவித்தார்.

ஹஜ் புனித யாத்திரையை மேற்கொண்டவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பும்போது அது அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கும் என்று குறிப்பிட்டார். விமானப் போக்குவரத்து மற்றும் விமான நிலையச் செயல்பாடுகள் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் மேற்பார்வையிடுகிறது என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் இதில் மிக முக்கியப் பங்காற்றுகிறது என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *