கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைராக கருதப்படுபவர் நல்லகண்ணு அவர்கள் . கடந்த வாரம் உடல்நிலை சீராகி வீடு திரும்பினார். இந்நிலையில் நள்ளிரவு மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள், நல்லகண்ணு அவர்களுக்கு சாதாரணமாக உணவு உடலில் உணவு குழாய் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில் , நேற்று இரவு தூக்கத்தில் இருக்கும்போது அந்த உணவு குழாய் தெரியாமல் கழன்றுவிட்டது. அதனை சரி செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த குழாய் மூலம், இட்லி, சாதம் உள்ளிட்ட கெட்டியான உணவுகளை திரவ வடிவில் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்றும் பரிசோதனை செய்து மீண்டும் இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *