
தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்கிறார்.
தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. பதவிக்காக ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகிய 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான பட்டியல் யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக, டெல்லியில் நடந்தக் கூட்டத்தில் இந்த 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யு.பி.எஸ்.சி. ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையில் மிக உயரிய பதவியாக விளங்கும் தமிழக டிஜிபி பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ் குமார் அகர்வால் இன்று காலை 10.45 மணியளவில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் 34ஆவது டிஜிபியாக பதவி ஏற்க உள்ளார்



