
டெல்லி செல்லும் அமைச்சர் உதயநிதி பிரதமர் மோடியை நாளை (வியாழக்கிழமை) சந்திக்கிறார்.
அப்போது தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டிக்கான நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பிதழை வழங்க உள்ளார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளைத் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை செய்து வருகிறது.
சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அமைச்சர் உதயநிதி பிரதமர் மோடியை நாளை (வியாழக்கிழமை) சந்திக்கிறார். அப்போது தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டிக்கான நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பிதழை வழங்க உள்ளார். மேலும் மத்திய விளையாட்டுத்துறை மந்திரியையும் சந்தித்து போட்டிக்கான அழைப்பிதழை வழங்குகிறார்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், வருகிற 19-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெற உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 5,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மற்றும் 1,600 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளைத் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை செய்து வருகிறது.

