கர்நாடக முதலமைச்சராக டி.கே. சிவகுமார் இன்று பதவியேற்பு.!

Advertisements

கர்நாடக முதலமைச்சராக டி.கே. சிவகுமார் ஆளுநர் முன்னிலையில் இன்று பதவியேற்க உள்ளார்.

கர்நாடகாவில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் சித்தராமையா கடந்த சில நாட்களுக்கு முன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து, கர்நாடகாவின் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராகக் கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், கர்நாடக ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே. சிவகுமாருக்குப் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

மேலும், டி.கே. சிவகுமாருடன் 12 முதல் 14 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இவ்விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே, கே.சி. வேணுகோபால் மற்றும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *