
தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதன் படி சென்னை தலைமையக டிஐஜி மகேஷ்குமார் தமிழக கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்ட ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை ஆணையராகவும், நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னா குமார் பதவி உயர்வு பெற்று நெல்லை மேற்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் சரக டிஐஜி உமா விழுப்புரம் சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபொல், தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டள்ளனர். மேலும் 3 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.



