மக்கள் தொகை பெருக்கத்தில் உலகிலேயே முதலிடத்தில் இந்தியா இருப்பதாக ஐ.நா சபை அறிவிப்பு,!

Advertisements

மக்கள் தொகை பெருக்கத்தில்  உலகிலேயே முதலிடத்தில் இந்தியா இருப்பதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை குறித்து ஐ.நா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் உள்ள தற்போதைய மக்கள்தொகை 146 கோடியே 39 லட்சமாக உள்ளது என தெரிவித்துள்ளது. இதன் மூலம் மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடத்தை இந்தியா பிடித்துள்ளது.

இன்னும்  40 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக உயர வாய்புள்ளதாக ஐ.நா  எச்சரித்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் 14 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 24 சதவீதமாகவும், 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 17 சதவீதமாகவும், 10 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை 26 சதவீதமாகவும், உள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *