நடிகை தேவயானி இயக்கிய குறும்படத்திற்கு சர்வதேச விருது!

Advertisements

நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி, தயாரித்துள்ள குறும்படம் ‘கைக்குட்டை ராணி’ ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்றது.

தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தேவையானி ‘கைக்குட்டை ராணி’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இளையராஜா இசையில் பி. லெனின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தக் குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளைப் பேசுகிறது.

இந்தக் குறும்படம் 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைபப்ட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது.

இருபது நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படம் தாயை இழந்த, தந்தை வெளியூரில் பணிபுரியும் ஒரு பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களைச் சந்திக்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது.

‘கைக்குட்டை ராணி’ குறும்படத்தில் நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த தேவயானி, “எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்த போதிலும், முதன்முறையாக நான் இயக்கிய குறும்படம் சர்வதேச‌ அளவில் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சையையும் பெருமையையும் அளிக்கிறது.
இதில் பங்காற்றியுள்ள மூத்த கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இதர சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *