நடிகர் விஜய்யின் மனு தள்ளுபடி..!

Advertisements

நடிகர் விஜய்க்கு விதித்த ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் செல்லும் என உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

நடிகர் விஜய் வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த 2015 ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, புலி திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் பெற்ற 15 கோடி ரூபாயை கணக்கில் வராததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து,  வருமானத்தை மறைத்ததற்காக விஜய்க்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாயை அபராதம் விதித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கு தொடர்பாக நீதிபதி பேசியபோது, விதிகளுக்கு உட்பட்டு தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதனிடையே, நீதிபதி உத்தரவை வாசித்த பின்னர் விஜய் தரப்பினர் தீர்ப்பாயத்தை அணுக அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற நீதிபதி அனுமதி வழங்கினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *