கடன்மீட்பு நடைமுறைகள் நியாயமானதாக இருக்கவேண்டும் – நிர்மலா சீதாராமன்

வங்கியல்லா நிதி நிறுவனங்களின் கடன்மீட்பு நடைமுறைகள் நியாயமானதாவும், மதிப்புக்குரியதாகவும் இருக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தில்லியில் வங்கியல்லா நிதி நிறுவனங்களின் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாமன் கலந்துகொண்டு பேசினார். அப்போது கடன்மீட்பு நடவடிக்கையின்போது வாடிக்கையாளர்களிடம் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கடன்மீட்பு நடவடிக்கையின்போது ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றி வாடிக்கையாளரின் கண்ணியம், மதிப்பு ஆகியன காக்கப்பட வேண்டும் என்றும், நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வங்கித் துறையின் முன்னுரிமைப் பிரிவில் உள்ள துறைகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதில் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றுவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *