முருகன் மாநாடு போல் விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி திட்டம் என்ன? 

Advertisements
மதுரையில் மிகப் பிரம்மாண்டமான அளவில் முருகன் மாநாட்டை நடத்திய இந்து முன்னணி அடுத்த கட்டமாக விநாயகர் சதுர்த்தி விழாவை மிக கோலாகலமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறது . வருகிற ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது இந்த ஆண்டு தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை மிகப் பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என இந்து முன்னணி தலைமையிடம் உத்தரவிட்டுள்ளது
அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைக்க முடிவு செய்யப்பட்டு தற்பொழுது சிலை தயாரிக்கும் பணிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது . விநாயகர் சிலைகள் அனைத்தும் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பேப்பர் கூழ் கிழங்கு மாவு மூலம் தயாரிக்கப்பட்டு வருகின்றன வாட்டர் கலர் வண்ணங்கள் பூசப்பட்டு வருகின்றன
சிம்ம வாகனம் சிவ பார்வதி முருக விநாயகர் சித்தி புத்தி விநாயகர் விஸ்வரூப விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன . குறைந்தபட்சம் மூன்று அடி முதல் அதிகபட்சம் 11 அடிவரை சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன . இந்த ஆண்டு தமிழக பாஜக தலைவர்கள் இந்து முன்னணி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஆங்காங்கே நடைபெறும் விழாக்களுக்குத் தலைமை தாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது
அந்த வகையில் திருப்பூரில் நடக்கும் விழாவில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்து கொள்கிறார் கோவையில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் விழாவில் நடிகர் ரஞ்சித் கலந்து கொள்கிறார்.  மதுரையில் நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் முருகன் கலந்து கொள்கிறார் திண்டுக்கல்லில் நடைபெறும் விழாவில் திரைப்பட இயக்குனர் பேரரசு கலந்து கொள்கிறார் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெறும் விழாவில் பாரதி ஜனதா கட்சி மூத்த தலைவர் எச். ராஜா கலந்து கொள்கிறார் .
உடுமலையில் நடைபெறும் விழாவில் நடிகை கஸ்தூரி பங்கேற்கிறார் . விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் ஜரூராக நடைபெற்று வருகிறது . இந்த ஆண்டு நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்து முன்னணி அமைப்பினர் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்களும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *