தமிழகம் , புதுச்சேரியில், இன்று முதல் ஜூலை 2 வரை, மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

Advertisements
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் ஜூலை 2 வரை, மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளநிலையில், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி,  நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 18 செ.மீ.,மழையும்; கோவை மாவட்டம் சோலையாரில் 17 செ.மீ.,மழையும் வால்பாறையில் 13; சின்னக்கல்லாரில் 12 செ.மீ., மழையும் பெய்துள்ளது.
இதேபோல், தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்துள்ளது. நேற்று வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் வரும் 2ம் தேதி வரை, மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *