
ஒன்றாக முன்னேற்றம் நிறைந்த எதிர்காலத்தை வடிவமைப்போம் என்று கானா நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி கானா சென்றுள்ளார். அங்கு கானா பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் இருப்பது ஒரு பாக்கியம் எனவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக, 140 கோடி இந்தியர்களின் நல்லெண்ணத்தையும், வாழ்த்துக்களையும், நான் என்னுடன் கொண்டு வந்துள்ளேன் எனவும், எங்களைப் பொறுத்தவரை, ஜனநாயகம் என்பது வெறும் அமைப்பு அல்ல, அது எங்கள் அடிப்படை மதிப்புகளின் ஒரு பகுதியாகும் என்றும், எனக்கு வழங்கப்பட்ட கானா தேசிய விருதை இரு நாடுகளையும் இணைக்கும் எனவும், நீடித்த நட்பு மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
மேலும், நமது உறவுகளை விரிவான கூட்டாண்மையாக உயர்த்த முடிவு செய்துள்ளோம் என்றும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக ஆர்டர் வேகமாக மாறி வருகிறது எனவும், 2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இந்திய மக்கள் உறுதிபூண்டுள்ளனர் என்றும், பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்தைப் பெற ஆப்பிரிக்காவின் வளர்ச்சி கட்டமைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றும், ஒரு வலிமையான இந்தியா, மிகவும் நிலையான மற்றும் வளமான உலகத்திற்கு பங்களிக்கும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
