tamilnadu: 65 கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்..!

Advertisements

சென்னை:இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், இந்து சமய அறநிலையத்துறையில் திருப்பணிகள், குடமுழுக்கு, தேர் மற்றும் குளங்கள் புனரமைப்பு, கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகள் செம்மையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 7.5.2021 முதல் 11.7.2024 வரை 1,856 கோவில்களுக்குக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன. 9,141 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

கும்பாபிஷேகம் நடைபெற்று 66 ஆண்டுகளும், பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகளும் கடந்த நிலையில் பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தி, ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள திருவான்மியூர், பாம்பன் சுவாமிகள் கோவில், ரூ.170.11 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வரும் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், பவானியம்மன் கோவில், ரூ. 1.52 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெறும் திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி, ஆபத்சகாயேஸ்வரர் (குருத் தலம்) கோவில், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்ற திருச்சி மாவட்டம், பூர்த்திகோவில் திருமுக்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 65 கோவில்களுக்குக் குடமுழுக்கு நாளை (12-ந் தேதி) வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகம் நடைபெறும் கோவில்களில் சென்னை, சேத்துப்பட்டு, கருகாத்தம்மன் கோவில், சேலம் மாவட்டம், கிருஷ்ணாநகர், சீதாராமச்சந்திர மூர்த்தி கோவில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, நாட்டுச்சாலை, அமிர்தகடேஸ்வரர் கோவில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மொனசந்தை, கரியமாணிக்கப் பெருமாள் கோவில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஞாயிறு, புஷ்பரதீஸ்வரர் கோவில், கன்னியாகுமரி மாவட்ட தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள 7 கோவில்கள், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், முத்து மாரியம்மன் கோவில், ராணிப்பேட்டை மாவட்டம், சேந்தமங்கலம், சுந்தர விநாயகர் கோவில், ஆகியவையும் அடங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *