annamalai:”பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான்”: யாரை சொல்கிறார் அண்ணாமலை?

Advertisements

சென்னை: ”தமிழகத்தில் மக்களைப் பிடித்த பீடைகள் போலப் பல பேய்கள் உள்ளன. அந்தப் பேய்களை ஓட்ட வேதாளம் ஆகிய நான் வந்துள்ளேன்” எனத் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் மக்களைப் பிடித்த பீடைகள் போலப் பல பேய்கள் உள்ளன. அந்தப் பேய்களை ஓட்ட வேதாளம் ஆகிய நான் வந்துள்ளேன். ஒவ்வொரு பேயாக ஓட்டி வருகிறேன். ஒரே நேரத்தில் எல்லா பேய்களையும் ஓட்ட முடியாது. செல்வப்பெருந்தகையை முன்னாள் ரவுடியென நான் கூறியது உண்மை தான். அவர்மீது நான் வைத்துள்ள விமர்சனத்திற்கான தரவுகளை வெளியிட்டிருக்கிறேன்.

செல்வப்பெருந்தகை பற்றி நான் சொன்னது உண்மையெனக் காங்கிரசை சேர்ந்த மூத்த மற்றும் முக்கிய தலைவர்கள் என்னிடம் தொலைபேசியில் அழைத்துக் கூறுகின்றனர். புதிதாக வந்துள்ள தொண்டர்கள் ஊருக்கு 4 பேர் என் உருவ பொம்மையை எரிக்கின்றனர். அதனால் மகிழ்ச்சிதான். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *