
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜூன் 8-ந்தேதி மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தல் தொடர்பாக, மாநில நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்த அமித் ஷா திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், ஜூன் 2-வது வாரத்தில் மதுரைக்கு வரும் அமித்ஷா, பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே தி.மு.க. பொதுக்குழு மதுரையில் நடைபெற்ற நிலையில், மத்திய உள்துறை அமித்ஷா மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 8-ந்தேதி மதுரை ஒத்தக்கடையில் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





